தனித்து போட்டியிடும் விஜய்க்கு ’All The Best’ - கனிமொழி
தனித்துப் போட்டியிடும் விஜய்க்கு வாழ்த்துகள் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமை திமுக எம்.பி. கனிமொழி தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “தி.மு.க. - பா.ஜ.க.வுடன் என்றுமே கூட்டணி இல்லை என்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் அறிவிப்பால் சில பேர் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கலாம். தவெக தனித்துப் போட்டியிட்டால் திமுகவுக்கு சவால் இல்லை. அதிமுக, தவெகவுக்கு வேண்டுமானால் சவாலாக இருக்கலாம். தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்திருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு All The Best.
தி.மு.க மீதும், முதல்வர் மீதும் மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையோடு இருக்கிறார்கள். மக்கள் யாரை, எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்களுக்கு எல்லாம் தெரியும், யார் நம்பிக்கையானவர்கள், யார் நமக்கு எதிரிகள் என்பது மக்களுக்கு தெரியும். விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் தனித்து போட்டியிடலாம். அது அவரவர் விருப்பம். அதிமுகவை யாராலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற ஈபிஎஸ் சூளுரை, அவருக்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கானதாக இருக்கலாம்” என்றார்.


