ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்- கனிமொழி

 
கனிமொழி கனிமொழி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

த.வெ.க தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?- கனிமொழி பதில்


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி, “ஸ்டெர்லைட் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தங்களுக்கு மனு வந்திருக்கிறது. ஆனால் நாங்கள் ஆலையை திறக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் நாங்கள் எடுத்திருக்கக் கூடிய கொள்கையில் உறுதியாகத் தான் இருக்கிறோம். முதல்வர் உறுதியாக இருப்பதைப் போல உறுதியாக இருக்கிறோம். தளபதி அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் ஏற்றதிலிருந்து தொடர்ந்து நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களை மேம்படுத்துவதற்கு தொழில், வேலைவாய்ப்பு, கல்வி, உள்ளிட்ட அனைத்து வகையிலும் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லக்கூடிய முயற்சியில் தமிழகம் முன்னிலை மாநிலமாக வெற்றிகரமாகமாற்றி காட்டி இருக்கிறார். அதுவே எங்களுடைய வெற்றியை சட்டமன்றம் நாடாளுமன்றத் தேர்தல்களில் எதிரொலிக்கும்.  இதை மக்கள் தெளிவாக உணர்ந்து இருக்கிறார்கள்” என்றார்.