ஈபிஎஸ் செய்திருப்பது துரோகம்- கனிமொழி

 
ஈபிஎஸ் செய்திருப்பது துரோகம்- கனிமொழி

எடப்பாடி பழனிசாமியின் செயல் தன்னுடைய கட்சி, தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணிக்குப் பின்னால், ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் கொடுத்த அழுத்தம் மற்றும் நெருக்கடியே முக்கிய காரணம் என்பதை அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இத்தகைய அழுத்தங்களுக்கு அடிபணிந்து, பாஜகவுடன் கூட்டணி என்கிற தமிழகத்தின் நலனைப் பறிகொடுக்கும் அதிமுகவின் முடிவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் பரவலாக கருத்துகள் சொல்லப்படுகின்றன. 

இந்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கருத்து கூறியுள்ள கனிமொழி எம்பி, “எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியது அதிமுக. எடப்பாடி பழனிசாமியின் செயல் தன்னுடைய கட்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும்  செய்த மிகப்பெரிய துரோகம். பாஜகவுடன் கூட்டணியை அறிவிக்கும் நிர்பந்தத்திற்கு அதிமுகவினர் ஆளாக்கப்பட்டுள்ளனர். அண்ணா, ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவரோடு கூட்டணியை அமைத்திருக்கிறார். இந்தியை திணித்ததை தவிர பாஜக என்ன செய்துள்ளது? காசி தமிழ்ச் சங்கத்தால் தமிழ் எப்படி வளர்ந்தது? திசை திருப்பும் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. நீட், வக்ஃப், நிதி ஒதுக்கீடு போன்றவற்றில் அதிமுகவின் நிலைபாடு என்ன?