ராகுல்காந்தியுடன் கனிமொழி சந்திப்பு! சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை
டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

திமுக காங்கிரஸ் இடையே கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் திமுகவின் மூத்த தலைவர் கனிமொழி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை தனியாக சந்தித்தார். கூட்டணி பிரச்சினைகளை சரி செய்வதற்காகவும் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்வதற்காகவும் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு நடந்துள்ளது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. சோனியா காந்தி இல்லத்தில் வைத்து ராகுல் காந்தியை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி வெளியில் வந்த போது ஊடகங்களிடம் பேசாமல் புறப்பட்டார்


