ரூ.2,152 கோடி நிதி விவகாரம் - கனிமொழி எம்.பி ஒத்திவைப்பு நோட்டீஸ்!

ரூ.2152 கோடி நிதியை மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்காத விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு ஜன. 31 முதல் பிப்.13 வரை நடைபெற்ற நிலையில், 2ஆவது அமர்வு தொடங்கியது. 24 நாட்கள் இடைவெளிக்குபின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு தொடங்கியது. அவை தொடங்கியதும் திமுகவினர் மும்மொழி கொள்கை விவகாரத்தை எழுப்பிய நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசினார்.
இந்த நிலையில், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2152 கோடி நிதியை மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்காத விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். நிதியை விடுவிக்க புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது என கனிமொழி நோட்டிஸில் தெரிவித்துள்ளார்.