அண்ணாமலை பேச்சுக்கு திமுக எம்.பி., கனிமொழி கண்டனம்!!!

 
tn

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அருவருக்கத்தக்க வகையில் கொச்சை வார்த்தைகளால் கருத்து தெரிவித்ததாக பலரும் சாடி வருகின்றனர். 

Annamalai

அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  ஆனால் கொங்கு மண்டல  வட்டார வழக்கில் தான் பேசியதாகவும் அதனால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்/ 



இந்நிலையில்  திமுக நாடாளுமன்ற உறுப்பினரும்,  துணை பொதுச்செயலாளருமான கனிமொழி தனது சமூக வலைதள பக்கத்தில், அண்மையில் பாஜக தலைவர்  திரு. @annamalai_k ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.என்று தெரிவித்துள்ளார்.