இன்று பிறந்தநாள் கொண்டாடும் திமுக எம்.பி., கனிமொழி ... தொண்டர்கள் வாழ்த்து...

 
கனிமொழி


திமுக எம்.பி., கனிமொழி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் . இதனையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், திமுக தொண்டர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கலைஞரின் மகள்... இந்த அடையாளத்துடன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கனிமொழி.. பின்னர் தந்தையைப் போலவே கனிமொழி..  கவிஞர் கனிமொழி.. திமுக மகளிரணித் தலைவி .. எம்.பி., கனிமொழி..., என தன் வளர்ச்சிப் பாதயை தானே செதுக்கி தமிழக  அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக உயர்ந்திருக்கிறார்..  தந்தையைப் போலவே தமிழின் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத  ஆர்வம் கொண்ட கனிமொழி ஆரம்பத்தில் பத்திரிக்கை ஊடகங்களில் தான் பணியாற்றினார்..  இந்து ஆங்கில நாளேட்டிலும், தமிழ் முரசு  இதழிலும் பணியாற்றிய அவர் பல கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்..

கனிமொழி

சமூக அரசியல்,  பெண்ணியக் கருத்துக்களில் ஆழமான கருத்துக்களை விதைத்து வரும்,  கனிமொழி அரசியலிலும் அதனை நீட்டித்தார்.. முதன்  முதலாக 2007  ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராத  தேர்வு செய்யப்பட்ட அவர், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மையப்படுத்தி சுமார் 10 நிமிடம் தனது முதல் உரையை நிகழ்த்தி அனைவரையும் அசர வைத்தார்.. தீர்க்கமாக , தெளிவாக,  நிதனாமாக தனது கருத்துக்களை முன்வைக்கும் கனிமொழியின் கருத்துக்கள் இப்போது வரை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன..

கனிமொழி

சமூக நீதி, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு,  பெண் சுதந்திரம் என தற்போது வரை எந்த கருத்திலும் சமரசம் செய்யாது.. துணிச்சலாக நாடாளுமன்றங்களில்  தன் பங்கை மெச்ச ஆற்றி வருகிறார்... முன்னதாக 2 முறை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி, 2019 ஆம் ஆண்டு  முதன்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜனைவிட சுமார் மூன்றரை லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று மாபெடும் வெற்றி பெற்றார்.
தற்போது  மக்களவையிலும்  சிறப்பாக பங்காற்றி வரும்   கனிமொழி இன்று ஜன 5 தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

இதனையொட்டி  அவரது சிஐடி காலனி இல்லத்தில் காலையிலிருந்தே ஏராளமான தொண்டர்களும் திமுக நிர்வாகிகளும் திரண்டனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து  வருகின்றனர்.