#BREAKING திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நிறுவன காரில் ரூ.50 லட்சம் பறிமுதல்

 
ச்

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது ஆலை காரில் 50 லட்சம் ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நடத்தும் மதுபான நிறுவனத்தினுடைய காரில் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.