அரசியலில் திடீர் பரபரப்பு : திமுக எம்பி கலாநிதி வீராசாமி மகன் மீது வழக்குப்பதிவு..!
கரூரைச் சேர்ந்த அன்புக்கரசு என்பவர் வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மீது, 14 கிரவுண்ட் நில மோசடி தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு புகார் அளித்திருந்தார். மனுதாரர் பெயரில் இருந்த பவர் பத்திரத்தை வாங்கிக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றி ஜாதியை சொல்லி திட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.
கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த், திமுக கவுன்சிலர் ராணி, எம்பியின் உதவியாளர் ஆசைத்தம்பி, நாராயணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜாதியை சொல்லித் திட்டியதால் தீண்டாமை வன்கொடுமை வழக்கும் பதிவு செய்ப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வடசென்னை திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மற்றும் 102வது வார்டு திமுக கவுன்சிலர் ராணி, திமுக எம்.பி.யின் உதவியாளர் ஆசைத்தம்பி, நாராயணன் உள்ளிட்டோர் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக கடந்த திமுக ஆட்சியில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பணமோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சித்தார்த் உள்பட 4 பேர் மீதும் பணமோசடி, தீண்டாமை வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

