நாங்கள் சனாதனத்தை ஒழித்ததால்தான் இன்று அண்ணாமலை ஐபிஎஸ் - திமுக எம்.பி ஆ.ராசா

 
a

பிரதமர் மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். காரர்களை விட வெள்ளைக்காரர்கள் யோக்கியர்கள, நாணயமானவர்கள் என திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

a


புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினத்தில் திமுக தலைவர் கலைஞருக்கு முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனை‌ தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, “திமுகவில் பல்வேறு மேடைகள் பல்வேறு கூட்டங்களில் பேசி இருக்கிறேன். ஆனால் அப்போது எல்லாம் இல்லாத பெருமை புதுச்சேரியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் சிலையை திறந்து வைத்தில் இருக்கிறது. அதற்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பண பலமும் சாதி பலமும் இருந்தால் தான் அரசியலில் செய்ய முடியும் என்ற காலகட்டத்தில் பெரியாரின் கொள்கைகளையே மட்டுமே தாங்கி அரசியலில் நடத்தியவர் தான் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி. கை ரிக்ஷா ஒழிப்பு பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்தவர் தான் முத்தமிழறிஞர் கலைஞர்.

சனாதனம் குறித்து பாஜகவினர் ஒரே மேடையில் பேச தயாரா என்று கேள்வி எழுப்பிய ஆ. ராசா, படித்தவன் அறிவை தவறாக பயன்படுத்தினால் அவன் மிருக்கத்திற்கு சமம் என்ற அம்பேத்கரின் கூற்றிற்கு எடுத்துக்காட்டாக தான் தற்போது பாஜகவினர் அரசியல் செய்கிறார்கள்.  சனாதனம் என்பது ஆர்ய மதம். சனாதனம் ஏற்பவர்கள் சக மனிதர்களுக்கு எதிரி. சனாதனம் வேண்டாம் என்ற போராட்டம் காரணமாக தான் அமித்ஷா உள்துறை அமைச்சர், தமிழிசை ஆளுநர், அண்ணாமலை ஐபிஎஸ் ஆக முடிந்தது. மணிப்பூரில் மிருகத்தனமான ஆட்சி நடத்திய ஒரு முதல்வரை பிரதமர் மோடியும் அமித்ஷாவும் அழைத்து கௌரவிப்பது எந்த விதத்தில் நியாயம் இப்படி கேடுகெட்ட ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஆர்எஸ்எஸ் காரர்களை விட வெள்ளைக்காரர்கள் நாணயமானவர்கள் யோக்கியர்கள்” எனக் கூறினார்.