அதானி குற்றவாளி என்றால், பிரதமர் மோடியும் குற்றவாளி தான் - ஆ.ராசா பரபரப்பு பேச்சு

 
a

மக்கள் பணத்தை பங்குசந்தையில் முதலீடு செய்து இழப்பு ஏற்படுத்திய அதானி குற்றவாளி என்றால், அவருக்கு உதவிய பிரதமர் மோடியும் குற்றவாளி தான் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கூறியுள்ளார். 

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தாமோ அன்பரசன், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது: நாட்டு மக்கள் எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கிகளில் முதலீடு செய்துள்ள பணத்தை எல்லாம், பிரதமர் மோடியின் துணையுடன் கடனாக பெற்றுக் கொண்ட அதானி, நாட்டில் உள்ள அனைத்து பொது நிறுவனங்களையும் சொந்தமாக்கி வெளிநாடுகளுக்குச் சென்று, பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, அதன்மூலம் உலக அளவில் 30ஆவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். 

a

அவருக்கு பக்கபலமாக இருந்து இரண்டாவது இடத்திற்கு அதானியை கொண்டுவர உதவியாக இருந்தது, நம் நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி.இந்நிலையில் இந்த முறைகேடுகள் மூலம், அதானி தற்போது முதலீடு செய்த நிறுவனங்கள் 10லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது. மீண்டும் அதானி உலக அளவில் பணக்காரர்கள் வரிசையில் 36ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்று கூறப்படும் நிலையில், இதனால் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து, இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளிநாட்டு பத்திரிகையான ஹின்டன்பெர்க், திட்டமிட்டு நாட்டு மக்களின் பணத்தை கடனாக பெற்று, முறைகேடுகள் மூலம் இழப்பு ஏற்பட்டதாக பிம்பத்தை ஏற்படுத்தி கொள்ளையடித்துள்ள அதானி ஒரு குற்றவாளி என்று கூறுகிறது. அப்படி அதானி குற்றவாளி, திருடன் என்றால் அதானியை பல்வேறு வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட செய்த நாட்டின் பிரதமர் மோடியும் குற்றவாளி தானே. இவ்வாறு கூறினார்.