"வாயைத் திறங்க CM" என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்..!
Updated: Jun 18, 2026, 09:55 IST1781756735794
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் தலைமையில், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் உரையுடன் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
சட்டப் பேரவை கூட்டத் தொடருக்கு வந்த திமுக எம்எல்ஏக்கள், "வாயைத் திறங்க CM" என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும் தவெக அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு வந்தனர்.
மேலும், Reels இங்கே real எங்கே?... தூய சக்தி அல்ல துயர சக்தி... திரையில் நாயகன் தரையில் வில்லன்... மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்.... போன்ற பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.

