திமுக எம்எல்ஏக்களுக்கு கார் தேவையில்லை... மற்றவர்களுக்கு யார், யாருக்கு கார் வேண்டுமோ வாங்கிக்கொள்ளுங்கள் - உதயநிதி ஸ்டாலின்..!
திமுகவின் 59 சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர் வழங்கும் வாகனத்தை வாங்க மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்கள் வழங்குவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். தி.மு.க-வைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வாகனங்களை பெறுவதில்லை என்று முடிவு எடுத்துள்ளோம். அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவை குறைக்கும் நோக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி, பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு மட்டுமே இந்த வாகனத்தை வழங்க வேண்டும் என்று அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த கடிதத்தை உங்களின் மூலமாக அரசுக்கு வழங்குகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
கார் இல்லாத உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் கொடுக்கலாம். எங்கள் உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு
சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ குளி ராமசந்திரன் அறிவிப்பு
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,அமைச்சருக்கு கார், வீடு, 4 உதவியாளர்கள் கொடுக்கப்படுகிறது; ஆனால் எம்எல்ஏக்களுக்கு அப்படி இல்லை; ஒரு எம்எல்ஏ மூன்று லட்சம் மக்களை சென்று பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது; அதனால்தான் கார் வழங்குகிறோம்.
மக்கள், தேர்தலுக்குப் பிறகு எங்கள் தொகுதிக்கு எம்.எல்.ஏ. வரவே இல்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
அரசு வாகனம் வழங்கப்பட்ட பிறகு, எம்.எல்.ஏ.க்களிடம் நாம் கேள்வி கேட்கலாம். அதேபோல், தொகுதி மக்களும் தங்கள் எம்.எல்.ஏ.விடம் கேள்வி கேட்க முடியும்.
முதலமைச்சராக இருக்கும் ஒருவர், MLA-க்களுக்கு கார் வழங்குவது தொடர்பான அறிவிப்பை அனைவருக்கும் சமமாகத்தான் வெளியிடுவார். அந்தக் காரை ஏற்க விருப்பமில்லாதவர்கள், “எங்களுக்கு கார் தேவையில்லை” என்று தெரிவித்துவிடலாம்.
#WATCH | எம்எல்ஏ-க்களுக்கு கார் ஆடம்பரம் இல்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா#UdhyanidhiStalin #AadhavArjuna #News18TamilNadu pic.twitter.com/b6wDM5ThHn
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 21, 2026

