விஜய் படங்களை விரும்பி பார்ப்பேன்... ‘லவ் டுடே’ 6 முறை பார்த்திருக்கிறேன்- திமுக எம்.எல்.ஏ.நெகிழ்ச்சி

 
ச்

பெரியவர்கள் ’நல்ல பெயர்’ எடுக்க வேண்டும் என்று சொன்னதை இந்த ஆட்சியாளர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் ‘நல்ல பெயர்களை’ எல்லாம் எடுத்து, அவற்றுக்குப் பெயர் மாற்றிப் புதிய திட்டங்களாக அறிவித்திருக்கிறார்கள் என தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் விமர்சித்துள்ளார்.

Image

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், “நானும் விஜய் படங்களை விரும்பி பார்ப்பேன். மாணவர் பருவத்தில் முதல்வர் விஜய்யின் படங்களை விரும்பிப் பார்ப்பேன். நான் கல்லூரியில் படிக்கும்போது ‘லவ் டுடே’ படத்தை 6 முறை பார்த்திருக்கிறேன். முதல்வர் மேடையில் பேசுவதைப் போல இங்கு பேசக்கூடாது. நல்லப் பெயரை எடுக்க வேண்டும் என்பதை இந்த அரசு தவறாக புரிந்துகொண்டிருக்கிறது. திட்டங்களுக்கு வைத்த நல்ல பெயர்களையெல்லாம் நீக்கிக் கொண்டிருக்கிறது. தவெக அரசின் இந்த பட்ஜெட் ஜீரோ பட்ஜெட். அதில் ஒன்றும் இல்லை.பெரியவர்கள் ’நல்ல பெயர்’ எடுக்க வேண்டும் என்று சொன்னதை இந்த ஆட்சியாளர்கள் தவறாகப் புரிந்துகொண்டு, திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் ‘நல்ல பெயர்களை’ எல்லாம் எடுத்து, அவற்றுக்குப் பெயர் மாற்றிப் புதிய திட்டங்களாக அறிவித்திருக்கிறார்கள்.  கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் 51ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளது. தற்போது 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி இந்தாண்டு 56 ஆயிரம் கோடி வருவாய் வரும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது


வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மூலம் 30 ஆயிரம் ஆடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12,600 ஊராட்சிகள் இருக்கும் போது ஒரு ஊராட்சிக்கு இரண்டு ஆடுகள் வழங்குவது எப்படி வெற்றி திட்டமாகும். இது வெத்து அறிவிப்பு திட்டம்.ஒரு ஊராட்சியில் 2 பேருக்கு மட்டும் ஆடு கொடுப்பது வெற்றி திட்டமா? வெற்றி விளம்பர திட்டமா? வெற்றி அரசு வெற்றி அரசு என்று தவெக சொல்வது மக்களுக்கு வெட்டி அரசு வெட்டி அரசு என கேட்கிறது. விவசாயிகளை தவெக அரசு வஞ்சித்துவிட்டது. உயர்க்கல்வித்துறைக்கு நிதி குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மாணவர்களுக்கு செய்யும் துரோகம்” என்றார்.