திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவு

 
அரசு மூத்த பெண் அதிகாரி கொடுத்த புகார் - திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு

பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் மேலாண்மை இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் குறித்து புகார் அளித்துள்ளார். அப்புகாரில் தன்னை சாதி பார்த்து பணிபுரிவதாக இழிவான முறையில் வசந்தம் கார்த்திகேயன் தொலைபேசியில் பேசியதாகவும், பணியில் நீடிப்பது குறித்து மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் அநாகரிகமாக மெசேஜ் செய்தது மட்டுமின்றி அவதூறு பரப்பியதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் தியாகதுருகம் போலீசார் வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம், பெண்ணை அவமதிக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்ய தியாகதுருகம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், முன் ஜாமின் கேட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வசந்தம் கார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளார்.