“தினமும் அதற்கு வேலை கொடுத்தால் அப்படிதான்”- விஜய் குறித்து திமுக எம்.எல்.ஏ. ஆபாச பேச்சு

 
ச்

திமுகவின் வசந்தம் கார்த்திகேயன் முதல்வர் விஜய் குறித்து டபுள் மீனிங்கில் அசிங்கமாக பேசிய வீடியோ வைரலாகிவருகிறது.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், “திமுக ஆட்சியில் எதோ ஒரு மூலையில் சிறிய தவறு நடந்தாலும் பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் ரீல்ஸ் போடுவீங்களே... தவெக தற்குறிகளே... எங்கே போனீங்கள்..? கள்ளக்குறிச்சியின் மாணவியின் இறப்புக்கு ஏன் விஜய் வாய் திறக்கவில்லை. எங்களுக்கு வந்தா ரத்தம் உங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா..? என்பதுபோல் உங்கள் நடவடிக்கை இருக்கிறது. சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேட்டார். ஆனால் முதல்வர் விஜயோ கருணாநிதி, மிசா என பேசுகிறார். நாங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு எங்கள் ஆட்சிக்காலத்தில் செய்த நலத்திட்டங்களைவிட நீங்கள் அதிகமான திட்டங்களை அறிவித்திருந்தால் நான் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போகிறேன். 

சட்டமன்றத்துல முதல்வர் கிட்ட கேள்வி கேட்டா... அவருக்கு பக்கத்தால இருக்குற 3 அள்ளக்கைகள் தான் பதில் சொல்றாங்க.. அதுவும் சம்மந்தமே இல்லாம பதில் சொல்லுவாங்க... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாய் கோணாலாக ஆகிவிட்டது உண்மைதான்.  சிறையில் இருந்து அடிபட்டு, மிதிபட்டு அவருக்கு வாய் கோணலானது. உனக்கு கூட வாய் கோணலாக உள்ளது. எப்படியாச்சுனு நான் சொல்ல முடியாது. தினமும் அதற்கு வேலை கொடுத்தால் அப்படிதான்... ஆக உனக்கு ஆன கோணல் வேறு... எங்களுக்கு ஆன கோணல் வேறு. எதிர்த்து பேசினால் நேரு வீட்டில் ரெய்டு, வேலு வீட்டில் ரெய்டு, உதயநிதி கைது... காவல்துறைக்கு ஒரே ஒரு கோரிக்கை எதுவாக இருந்தாலும் உன்னையும், உதயநிதியையும் சேர்த்து கைது செய்யுங்கள். எங்கள் இருவருக்கும்தான் விஷயம் தெரியும்” என்றார்.