சரணடையும் நாளிலேயே ஜாமீன் கேட்ட திமுக எம்எல்ஏ மகன், மருமகள்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 
ஜாமீன்

திமுக எம்.எல்.ஏ.-வின் மகன், மருமகள் ஆகியோர் சரணடையும் நாளிலேயே ஜாமீன் வழங்குவது குறித்து சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


18 வயது பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சரணடையும் நாளிலேயே ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மனுதாரர் தரப்பிற்கு  உரிய வாய்ப்பளித்து முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளார். சரணடையும் நாளிலேயே ஜாமீன் வழங்குவது குறித்து சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.