பட்டியலின பெண்ணை தாக்கிய திமுக எம்எல்ஏ மகன், மருமகள் கைது

 
கைது

பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் ஆன்டோ மதிவாணன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த பட்டியலின வகுப்பை சேர்ந்த ஆதிதிராவிட சிறுமியை கொடுமைப்படுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை சித்ரவதை செய்த விவகாரத்தில் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏவின் மகன் ஆன்டோ மதிவாணன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்டனர். பட்டியலின பெண்ணை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை கைது செய்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநறுங்குன்றம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மாணவி 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில்  தொடர்ந்து மருத்துவ கல்வி பயில வேண்டும் என முடிவு செய்து உயர் படிப்பிற்கு ஆகும் செலவை சமாளிப்பதற்காக வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதாவது சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டிற்கு மாணவி வேலைக்கு சென்றதாக தெரிய வருகிறது. குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு சென்ற அந்த சிறுமியை திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவர் மனைவி மார்லீனோ ஆன் ஆகியோர் அடித்து துன்புறுத்தியதாக மாணவி தமிழக காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.