அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி அளித்த திமுக எம்எல்ஏ

 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு  நிதி அளித்த திமுக எம்எல்ஏ

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட திமுக எம்எல்ஏ செஞ்சி மஸ்தான் நிதி வழங்கியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு  நிதி அளித்த திமுக எம்எல்ஏ

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதென்பது பலரின் கனவாக இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ராமஜென்ம பூமியில் ராமர் கோவிலை கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு முதற்கட்டமாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை உருவாக்கி அதன் மூலம் கோவில் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது.இந்த கோயில் கட்டுவதற்கு நன்கொடைகள் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 13ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, மக்கள் தங்களால் முடிந்த நன்கொடைகளை ராமர் கோவில் கட்ட வழங்கி வருகிறார்கள். இதுவரை ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1, 511 கோடி நன்கொடை வசூலிக்க உள்ளது என்று தெரிவித்தார்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு  நிதி அளித்த திமுக எம்எல்ஏ

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிதி சேகரித்து வருகிறார். இவர் சமீபத்தில் திமுக எம்எல்ஏ செஞ்சி மஸ்தான் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எம்எல்ஏ மஸ்தான் 11 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், இதுவரை 304 கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் நான். இதை உணர்ந்து பாஜகவினர் என்னிடம் நிதி கேட்டனர் . நானும் மனமார என்னால் முடிந்த உதவியை செய்துள்ளேன் என்றார்.