“ரூ. 1 கோடி செலவு செய்த அதிமுக எங்கே? ரூ.27 கோடி செலவு திராவிட மாடல் அரசு எங்கே?"- எம்.எல்.ஏ எழிலன்

 
dmk mla ezhilan dmk mla ezhilan

தொல்லியல் ஆய்வுகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. தமிழர் தொன்மைக்கும், தமிழர் பண்பாட்டுக்கும்  துரோகம் செய்துவரும் எடப்பாடி பழனிச்சாமியைத் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என திமுக மருத்துவரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் கூறியுள்ளார்.

மாநில அரசின் சுயமரியாதையை மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது- திமுக எம்எல்ஏ  எழிலன்- The central government is insulting the self-respect of the state  government - DMK MLA Ezhilan

இதுதொடர்பாக திமுக மருத்துவரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கீழடி ஆய்வு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் உங்கள் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உள்ள திராவிட மாடல் அரசு கீழடிக்காக மற்றுக்கொண்ட பணிகளைப் பற்றியும் அறிவீர்கள். கீழடி ஆய்வின் போது அதை மேற்கொண்ட அமர்நாத் பணி மாற்றம் செய்த, கீழடி ஆய்வின் உண்மைத் தன்மையை கேள்வி எழுப்பிய பாஜக அரசை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தியது.

அதிமுகவின் திரு.மாஃபா பாண்டியராஜன் அவர்கள் அதுபற்றி கருத்துகளை தெரிவித்துள்ளார். கீழடி வரலாறு குறித்து முதலில் தெரிவித்துவிட்டு, பிறகு அவருக்குப் பதில்கள் செல்கிறேன். பள்ளிக்கூட ஆசிரியர் வி.பாலசுப்பிரமணியன் 1971 ஆம் ஆண்டு கீழடி நாகரிகம் குறித்து சில ஆய்வுத் தரவுகளை எடுத்து கூறியதன் பின், அப்போதை ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தில் 2013-14-ல் கீழடி ஆய்வு தளம் என ASI-க்கு ஒரு ரிப்போர்ட் சமர்பித்தது.2014-ல் பாஜக அரசு வந்தபின் அமர்நாத் தலைமையில் இரண்டு கட்ட அளவில் தொல்லியல் ஆய்வு நடத்தினர். 2016 முடியும் தருவாயில் அந்த ஆய்வை நிறுத்தி கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டார்; அந்த ஆய்வை மூட சொன்னர்கள்; தனியார் நிலத்தில் ஆய்வு நடப்பதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதாகவும் அகழ்வாராய்ச்சியை ASI நிறுத்துகின்றனர். அந்த சூழலில் முத்தமிழர் கலைஞர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் “அந்த அறிக்கையில் கீழடி நாகரித்துக்கும் - சிந்துவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பை கீழடி ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை சொன்ன பொய் கதைகள் எல்லாம் இதன் மூலம் மாற்றியமைக்கப்படுகிறது; இந்த தமிழ்நாட்டின் தென்னகத்தின் தொடக்கம்” என கலைஞர் குறிப்பிட்டார். அந்த ஆய்வின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், கனிமொழி அவர்கள் கீழடி ஆய்வுக்கே சென்றனர். ASI இதை நிறுத்தியதும் கனிமொழி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்; அந்த வரலாற்று சிறப்புமிக்க வழக்கில், எதற்காக ஆய்வுகளை நிறுத்தினீர்கள் என கேள்வி எழுப்பினர்.

பலரும் குரல் எழுப்பியதால் அதிமுகவினர் மீண்டும் வழக்கில் பதில் அளித்து, அதற்கு நாங்கள் உதவி செய்வதாக கூறினர். கனிமொழி அவர்களின் வழக்கு தீர்ப்பில் 1. அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து நடத்தவேண்டும்; 2. மைசூருக்கு கொண்ட சென்ற பொருட்கள் மீண்டும் தமிழகத்திற்கு கொண்ட வர வேண்டும்; 3. இதை பாதுகாக்க ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர் என்று கூறினர். எனவே உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் அதிமுக அரசு – எடப்பாடி அரசு கீழடி ஆய்வைத் தொடர்ந்தது. திராவிட மாடல் முதலமைச்சர் ஆட்சியில் கீழடி அகழாய்வு முழு அளவில் ஊக்குவிக்கப்பட்டது. அது குறித்த ஆய்வுமுடிவுகளைப் பற்றி முதல்முறையாக சட்டமன்றத்தில் பேசினார். நிதி ஒதுக்கீடு குறித்து தவறான தகவலை அதிமுகவினர் சொல்லியுள்ளனர்; உதயகுமார் அவர்கள் ரூ.55 லட்சம் ஒதுக்கியுள்ளதாக கூறினார். இன்றைக்கு மாஃபாஅவர்கள் ரூ.105 கோடி ஒதுக்கியதாக கூறியுள்ளார். ஆனா அதிமுக ஆட்சியில் இரண்டே இரண்டு அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். ஒன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டறை பரம்மத்தூரில் ரூ.5 லட்சம் ஒதுக்கினர். கீழடிக்கு ரூ.55 லட்சம் ஒதுக்கியுள்ளனர். ஒரு அப்படமான பொய்யாக ரூ.105 கோடி செலவு செய்ததாக சொல்லியுள்ளனர்.

Cherishable moment in Dravidian history": DMK's Ezhilan on Udhayanidhi's  elevation as TN Deputy CM

 
நாம் எவ்வளவு செலவு செய்து இருக்கிறோம் என பட்ஜெட் குறித்த அறிக்கை சட்டமன்றத்தில் சொன்னதை நான் திரும்பவும் உங்களிடம் சொல்கிறேன். 2021 - கீழடி, சிவகலை, கங்கை கொண்ட சோழப்புரம், மயிலாடுப்பாரை, கொர்க்கை, அதிச்சந்நல்லூர், கொடுமணல் - இந்த இடத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறோம் - ரூ.5 கோடி, 2022 - கீழடி, சிவகலை, கங்கை கொண்ட சோழப்புரம், மயிலாடுப்பாரை, வெப்பங்கோட்டை, துலக்கரப்பட்டை - ரூ. 5 கோடி, 2023- கீழடி, சிவகலை, கங்கை கொண்ட சோழப்புரம், வெப்பங்கோட்டை, பட்டறை பெருமத்தூர் - ரூ.5 கோடி, 2024 - மருங்கணூர், கொங்கல் நகரம் - ரூ.5 கோடி, 2025 - மற்ற இடங்களுடன் சேர்த்து வெல்லலூர், அதிச்சநல்லூர் ரூ.7 கோடி, மொத்தம் 30 இடங்களில் ஆய்வு செய்து 37 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு ரூ.27 கோடி ஒதுக்கினர். ரூ. 1 கோடி செலவு செய்த அதிமுக எங்கே? ரூ.27 கோடி செலவு திராவிட மாடல் அரசு எங்கே?
 

அப்போதே, 2016-ல் கீழடி ஆய்வு நிறுத்தப்படும்போது ஏன் அதிமுக கண்டன குரல் ஏன் எழுப்பவில்லை? தனிநபராக கனிமொழி அவர்கள்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏன் எடப்பாடி அரசு அதை செய்யவில்லை? தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியலுக்குத் தொன்மை அரசியலுக்கும் அதிக தொடர்பு உள்ளது. யார் யாரெல்லாம் தமிழர் தொன்மைக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் பாதுகாப்பாக உள்ளார்கள்; யார் யாரெல்லாம் தமிழர் தொன்மைக்கும், தமிழர் பண்பாட்டுக்கும்  துரோகம் செய்கின்றார்கள் என்பதை மக்கள் தெளிவாகப் பார்த்துவருகின்றார்கள். தமிழர் தொன்மைக்கும், தமிழர் பண்பாட்டுக்கும்  துரோகம் செய்துவரும் எடப்பாடி பழனிச்சாமியைத் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.