உட்கட்சி பூசல்- எம்.எல்.ஏ. வீட்டின் முன் தீக்குளித்த திமுக நிர்வாகி

 
தீக்குளிப்பு

மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. தளபதியின் வீட்டின் முன் திமுக நிர்வாகி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் மூலக்கரை பகுதியில் உள்ள தளபதி வீட்டின் முன், மானகிரி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி கணேசன் தீக்குளித்தார். 90 சதவீத தீக்காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கோஷமிட்டபடியே மானகிரி கணேசன் தீக்குளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தீக்குளிப்பு சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.  இதனிடையே கட்சி விவகாரத்தில் தலையிடும் தளபதியின் செயல்பாட்டுக்கு எதிராக திமுக நிர்வாகி மானகிரி் கணேசன் முழக்கமிட்டதாக தெரிகிறது.