“இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது”- மாணவருக்காக குரல் எழுப்பும் மு.க.ஸ்டாலின்
"அம்பேத்கர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் கடந்த ஆண்டுக்கான உதவித்தொகை இப்ப வரைக்கும் வரல.. இதனை ஏப்ரல் மாதமே நான் கூறியிருந்தேன். காலேஜ்ல இருந்து என்னைய எலிமினேட் பண்ண போறாங்க.." என மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் படித்து வரும் மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார்.
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
— M.K.Stalin (@mkstalin) September 17, 2026
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு…
இதனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ““எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

