கையில்லாமல் 437 மதிப்பெண்கள் எடுத்த மாணவருக்கு அரசு உறுதுணையாக இருக்கும்- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்த க்ரித்தி வர்மா, 2 கைகளையும் இழந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்து தான் படித்த அரசுப்பள்ளியில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். “தன் மகனுக்கு அரசு உதவ வேண்டும் எனவும், அவனுக்கு கைகள் பொருத்தி நம்பிக்'கை' தந்தால், என் வாழ்க்கையில் நான் வெற்றி அடைந்த மாதிரி" என கணவனின்றி வாழும் க்ரித்தி வர்மாவின் தாய் கஸ்தூரி கண்ணீருடன் பேட்டி அளித்திருந்தார். 

கவி

இதுதொடர்பான செய்தியை டிவிட்டரில் பார்த்தது மட்டுமின்றி, அதற்கு பதில் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது.

மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள் அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

null



நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்” என உறுதி அளித்துள்ளார்.

Image

க்ரித்தி வர்மா தாயாரிடம் தொலைப்பேசி வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “நீங்கள் உதவி கேட்டு உள்ளீர்கள். அரசாங்கம் சார்பாக செய்து கொடுக்கிறோம். மாவட்ட ஆட்சியரை அனுப்புகிறேன். உங்களுக்கு அவர் தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்.  உடல்நலத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொடுக்கிறேன்” என நம்பிக்கை தெரிவித்தார்.