"கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம்"- மு.க.ஸ்டாலின்

கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) May 15, 2023
இனி இப்படி ஒரு சம்பவம் நிகழக் கூடாது… pic.twitter.com/64Fw5RzI7T
இனி இப்படி ஒரு சம்பவம் நிகழக் கூடாது என ஆய்வுக் கூட்டத்தில் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன். கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் ஆகிய 5-பேர் உயிரிழந்தனர். இதனிடையே கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.