“மிசா கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல; நாங்க வட்டியும் முதலுமா திருப்பி கொடுப்போம்”- மு.க.ஸ்டாலின்

 
“மிசா கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல; நாங்க வட்டியும் முதலுமா திருப்பி கொடுப்போம்”- மு.க.ஸ்டாலின்

மிசா கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல, என் தியாகத்திற்கு மார்க் போட எவனுக்கும் தகுதி கிடையாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “தவெக ஆட்சியில் ரெண்டே ரெண்டுக்கு நடுவில்தான் போட்டியே... ஒன்று மின் வெட்டு, இன்னொன்று அரிவாள் வெட்டு. எதிரி யார் என கணித்து பணியாற்றி இருந்தால் சட்டமன்ற தேர்தலில் தோல்வியே ஏற்பட்டு இருக்காது. நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் வெறும் 17 லட்சம் வாக்குகள்தான். மிசா கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல, என் தியாகத்திற்கு மார்க் போட எவனுக்கும் தகுதி கிடையாது. கொளத்தூர் மக்களுக்கு கோடானு கோடி நன்றி. சட்டசபையில் நடக்கும் கொடுமைகளை பார்க்காமல் தப்பித்துக் கொண்டேன். நாங்கள் வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம். சீக்கிரமா வரோம்.. திமிர்தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.

CM Sir.. இந்தியாவில் இருக்கும் கம்பெனிக்கு ஏன் வெளிநாட்டில் கையெழுத்து? விலைவாசி உயர்வே தவெக ஆட்சியின் லட்சணத்தை சொல்கிறது.. விலைவாசி உயர்வில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது. எங்கள் கூட்டணி சார்பில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடுதான் இங்கு ஆட்சியே நடந்துகொண்டிருக்கிறது. முதலில் பஞ்ச் டயலாக், இப்போது வெளிநாட்டு சுற்றுலா. முதலமைச்சரைப் பொறுத்தவரை எல்லாமே ரீல்ஸ்தான். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கி, தமிழ்நாட்டை 25 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிட்டார்கள். ஆட்சி அமைத்து இருக்கிற கட்சிக்கு பெரும்பான்மையில்லை,ஆனா ரொம்பதான் பில்டப் காட்டுறாங்க,நம்ம கூட்டணி கட்சிகளாலதான் ஆட்சியே நடக்குது. தவெக அரசு செயலிழந்துள்ளது. ஒரே நாளில் 8 படுகொலை, இரட்டைக் கொலை, ஆணவப் படுகொலை, லாக்-அப் மரணம், டாஸ்மாக் தகராறில் கொலை என கொலைகளை எண்ணும் சூழல். கரண்ட் இல்லாமல் மக்கள் பரிதவிக்கிறார்கள். தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வு, ஆவின் பால் பற்றாக்குறை, மக்களுக்கு வருமானம் இல்லை. டெங்கு காய்ச்சலால் 12 பேர் மரணம். ஆனால், இனிதான் நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்கிறார்கள். இவை எல்லாவற்றையும் கவர்ச்சியால் சரிகட்டலாம் என்ற ஆணவத்தோடும், மீடியாவை சந்தித்து பதில் சொல்ல மாட்டேன் என்ற திமிரோடும் இருக்கிறார் முதலமைச்சர். இதற்கெல்லாம் இடைத்தேர்தலில் முடிவு கட்டுவோம்” என்றார்.