இனி திமுக தான் எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்; நான் இருக்கும்வரை தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது - மு.க.ஸ்டாலின்

 
ச்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி திமுக மாநாட்டில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “கருப்பு சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை காவி கூட்டம் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது  நம்பர் 1 மாநிலம் என ஒன்றிய அரசு சொல்கிறது. சூப்பர் ஸ்டேட் என பத்திரிகைகள் சொல்கின்றன. சமீப காலமாக தவணை முறையில் சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன. அதுவும் திராவிட மாடல் அரசின் திட்டத்தை டாப்-அப் செய்து அறிவிக்கின்றனர். ஏனென்றால் அந்த திட்டங்களில் எல்லாம் தடுக்கவோ, நிறுத்தவோ யோசிக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். எவராலும் மாற்ற முடியாத திட்டங்களை நாம் கொண்டு வந்துருக்கிறோம்.


திமுக அரசின் திட்டப் பயனாளிகள் வாக்களித்தாலே போதும், நமக்கு முழு வெற்றி கிடைக்கும். அதை உறுதி செய்வதுதான் உங்கள் பணி. 2021ல் இதே ஊரில் நடந்த மாநாட்டில் 7 இலக்குகளை அறிவித்தோம். அந்த இலக்குகளை இன்று எட்டி சாதனை படைத்துள்ளோம். ஒன்றிய அரசின் புள்ளி விபரங்களே இதனை உறுதிப் படுத்துகின்றன. 200 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டை நடத்தி 200 இடங்களை வெல்ல வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் அமைச்சர் நேரு. திமுக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை இதே திருச்சியில்தான் பேரறிஞர் அண்ணா எடுத்தார். அதன்படி திமுக தேர்தல் களத்திற்கு வந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலக் கட்சியை ஆட்சியில் அமர்த்தியவர் அண்ணா.தமிழர்களைக் காக்க தகுதியும் திறமையும் கொண்ட ஒரே படை திமுகதான். தமிழ்நாட்டை நம்பித்தான் நாம் இருக்கிறோம். நம்மை நம்பித்தான் தமிழ்நாடு இருக்கிறது. 7வது முறை அல்ல, இனி எப்போதும் தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆளும்” என்றார்.