“தமிழ்நாடு நம்மை நம்பி இருக்கிறது! 7-வது முறையாக திமுக அரியணை ஏறும்”- மு.க.ஸ்டாலின்
திருச்சியில் திமுகவின் 12-வது மாநில மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், “திரும்பும் திசையெல்லாம் அண்ணாவின் தம்பிகள். திரும்பிய திசையெல்லாம் கருப்பு சிவப்பு. திமுகவின் பெரும் சேனை திரண்டுள்ளது. சேனையின் தலைமை தொண்டன் நான். மண்டல அளவில் நடந்த பூத் நிர்வாகிகள் மாநாட்டை அடுத்து உச்சமாக திருச்சியில் மாநில மாநாடு. மாநாட்டுக்கு வந்தபோது நீங்கள் அளித்த வரவேற்பு என் வயதை குறைத்துள்ளது. என் இளமைக்கு காரணம் தொண்டர்களின் அன்பு.தமிழகமே திருச்சியில் திரண்டுள்ளது. மக்கள் கூட்டத்தல் சிறுகனூர் பெருகி உள்ளது. கடைசி ஓவரில் அடித்து ஆட வேண்டும். கிரிக்கெட்டில் ஃபினிஷிங் முக்கியம். கிரிக்கெட்டில் கடைசி் பந்தில் வெற்றிக்கு சிக்சர் அடிப்பது கிராண்ட் பினிஷிங், அதுபோல் வெற்றிக்கு இம்மாநாடு. திமுகவுக்கு இது 12-வது மாநாடு.
200 ஏக்கரில் மாநாடு. அதாவது 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்கு. ஸ்டாலின் தொடரட்டும் என்பது எனக்கான முழக்கம் அல்ல, திராவிடம் திமுக தொடரட்டும் என்பதற்கானது. திருச்சி என்றாலே திருப்பம், திருச்சி என்றாலே எழுச்சி, திருச்சி என்றாலே மகத்தான வெற்றி. தமிழகத்தை காக்க கருப்பு, சிவப்பு ஆடி முக்கியம். ஏழாவது முறையாக திமுக அரியணை ஏறும். தமிழ்நாடு நம்மை நம்பி இருக்கிறது” என்றார்.

