“நாம் வேரறுக்கும் வேகத்தைப் பார்த்து எதிரிகள் ஓட வேண்டும்”- மு.க.ஸ்டாலின்
Offline, Online ரெண்டுலையும் திமுகதான் Lion-னு காட்டுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஐடி விங் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தோழமை கட்சிகளுடன் சிண்டு முடியும் வேலையை செய்யும் எதிர்கட்சிகளுக்கு எதிராகக் களமாடுங்கள். பொய் செய்திகளை பரப்பும் போலி இணைய பக்கங்களை பாஜக நடத்தி வருகிறது, அதற்கும் பதிலடி கொடுங்கள். பொய் செய்திகளை நாம் வேரறுக்கும் வேகத்தைப் பார்த்து எதிரிகள் ஓட வேண்டும். நமது ஆன்லைன் செயல்பாடுகள் இன்னும் வேகமாக அமைய வேண்டும். நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சி வரலாற்றை எழுதிய நம்மை களங்கப்படுத்தி, தமிழ்நாட்டை சிதைத்துவிடலாம் என நினைக்கிறார்கள். அவதூறுகளுக்கு மட்டும் பதிலளித்து கொண்டிருக்காமல் சில நேரங்களில் பதிவுகள் மூலம் அட்டாக் செய்யலாம். Offline, Online ரெண்டுலையும் திமுகதான் Lion-னு காட்டுவோம்.
கட்சிக்காக உழைப்போர் ‘போர்வாள்’ , இணையத்தில் உழைப்போர் ‘ஃபையர்வால்’. இந்தியாவிலேயே பூத் அளவில் டிஜிட்டல் ஏஜெண்ட் வைத்திருக்கும் அரசியல் இயக்கம் திமுகதான். ஆன்லைன் மட்டுமின்றி, ஆப்லைனிலும் கலக்கும் அணியாக திமுக ஐடி அணி இருக்கிறது. கண்டெண்ட்டில் கிங் திமுகதான். ஆன்லைனில் ஹேஷ்டாக் டிரெண்ட் செய்வது மட்டும் ஐடி விங் பணி அல்ல. தமிழ்நாட்டில் அரசியல் அஜெண்டாவை அமைக்க வேண்டும். ஏனெனில் கண்டெண்டில் நாம் தான் கிங்! 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வென்று Sweep பண்ணோம். இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலிலும் Clean Sweep செய்து திராவிட மாடல் 2.0 ஆட்சியை நாம் அமைக்கணும்” என்றார்.

