“திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட்... வெற்றி ரிப்பீட்டு- அடித்து சொல்லும் மு.க.ஸ்டாலின்

 
ம்க்ச் ம்க்ச்

2021-இல் இருந்ததைவிட, தமிழ்நாடு முழுவதும் நமக்கான வரவேற்பும், ஆதரவும் இப்போது கூடியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ம்க்

திருப்பத்தூரில் நடைபெற்ற ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “தேர்தலுக்குள் நீங்கள் ஒவ்வொருவரும் - 100 வாக்காளர்களை, குறைந்தது  5 முறையாவது நேரில் சந்திக்க வேண்டும். இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா? என்னதான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என்று புதுப்புது ஊடகங்கள் வந்தாலும், நேரில் சந்தித்து மக்களிடம் பணிவாக வாக்கு கேட்கும் பிரச்சாரத்திற்கு எதுவும் ஈடாகாது! அதனால்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன்! பரம்பரை பரம்பரையாக தி.மு.க.விற்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பிரச்சாரத்தின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து, சாதனைகளைச் சொல்லி, வாக்குறுதிகளைச் சொல்லி, வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்! இதை நீங்க ‘ரிப்பீட் மோட்’-இல் செய்ய வேண்டும்! அப்போதுதான் நம்முடைய வெற்றியும் ‘ரிப்பீட்’ ஆகும்! 

2021-இல் இருந்ததைவிட, தமிழ்நாடு முழுவதும் நமக்கான வரவேற்பும், ஆதரவும் இப்போது கூடியிருக்கிறது. 2021 தேர்தலில் ‘இதையெல்லாம் செய்வோம்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தோம்! இப்போது, சொன்னதையும் தாண்டி செய்து கொண்டிருக்கிறோம். அதனால், கெத்தாக மக்கள் முன் நிற்கிறோம்! அதனால், மெத்தனமாக இருக்காமல் களத்தில் தொடர்ந்து உழைத்தால், சென்ற முறை அடைந்ததை விட பெரிய வெற்றி, 100 சதவிகிதம் சாத்தியம்! 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வாங்கிய வாக்குகளை சட்டமன்றத் தொகுதிவாரியாகப் பார்த்தாலே, தெளிவாகத் தெரியும். நிச்சயமாக 2026-இலும் 200 தொகுதிகளுக்கு மேல் நாம்தான் வெல்லப் போகிறோம்! அதற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம். உங்கள் அனைவருக்கும் ஆளுக்கு 100 வாக்காளர்களை ‘அசைன்’ செய்துவிட்டோம்! தேர்தல் அன்றைக்கு பூத்துக்கு வந்து அவர்கள் நமக்கு வாக்களிக்கும் வரை, அவர்களை நீங்கள் அணுகிக் கொண்டே இருக்க வேண்டும்! எப்படி? பணிவாக... கனிவாக... மரியாதையாக... நட்பாக... அணுக வேண்டும்! அதுமட்டுமல்ல, வாக்குப்பதிவு முடிந்து மெஷினில் சீல் வைத்து, எடுத்துக் கொண்டு போகும் வரை நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்!

Advertisement

ச்

வீடு வீடாகச் செல்லுங்கள்! சகஜமாக - உரிமையுடன் பிரச்சாரம் செய்யுங்கள். அவர்களிடம் நம்முடைய சாதனைகளை பொறுமையாக விளக்கிச் சொல்லுங்கள்! அவர்களே அதை உணர்ந்து, நமக்கு வரவேற்பு அளிப்பார்கள்! நண்பர்களின் டீக்கடையில் உட்கார்ந்து எவ்வாறு டிஸ்கஸ் செய்வோமோ – அரட்டை அடிப்போமோ, அது போன்று ஃப்ரண்ட்லியாகப் பேசுங்கள். நம்முடைய கழக ஆட்சி மீண்டும் வந்தால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடரும், தமிழ்நாட்டின் சுயமரியாதை காப்பாற்றப்படும் என்று அவர்கள் மனதில் பதிய வையுங்கள். குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்களிடம் அவர்களுக்காக நாம் செய்து கொண்டு வரும் திட்டங்களை எடுத்துச் சொல்லுங்கள்! நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், லேப்டாப் திட்டம் அனைத்தையும் நினைவூட்டுங்கள்! தனியார் தொழிற்சாலைகள் மூலம் மட்டுமே 38 லட்சம் வேலைவாய்ப்புகளை அவர்களுக்காக உறுதி செய்திருக்கிறோம் என்று புரிய வையுங்கள்! இரண்டாம் நிலை நகரங்களிலும் டைடல் பார்க், சின்ன சின்ன மாவட்டங்களிலும் சிப்காட், எல்காட் பூங்கா திறந்திருக்கிறோம் என்று லிஸ்ட்-ஐ எடுத்து காட்டுங்கள்! இதற்காக உங்களுக்குத் தேவைப்படும் தகவல்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை, உங்கள் அனைவருக்கும் வழங்கியிருக்கிறோம். அதில், நம்முடைய ஐந்தாண்டு சாதனைகளை விளக்கி, சட்டப்பேரவையில் நான் பேசிய ‘ஸ்பீச்’ தெளிவாக இருக்கிறது. அதை முழுவதுமாக படித்து, அதில் உள்ள திட்டங்களை ஒன்று விடாமல் மனப்பாடமே செய்துவிடுங்கள்.

நம்முடைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் நிச்சயமாக ஏதாவதொரு வகையில் பயன்பெறும்படி நம்முடைய திட்டங்கள் அமைந்திருக்கிறது. அவை அனைத்தும் அவர்கள் வீட்டின் ஒரு அங்கமாக இருப்பது போன்று நோட்டீஸ் அடித்துக் கொடுங்கள்! அடுத்த 2 மாதம் எந்தப் பக்கம் திரும்பினாலும், எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும், அங்கு D.M.K. Brand-தான் தெரிய வேண்டும்! மறந்துவிடாதீர்கள். தெருமுனைக் கூட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்கள் மற்றும் மகளிரை கழகத்தை நோக்கி அதிக அளவில் ஈர்க்க வேண்டும்! ஏன் என்றால், அவர்களுக்காகத்தான் இந்த 5 ஆண்டுகளில் நிறைய செய்திருக்கிறோம்! ஒவ்வொரு தனி மனிதரின் கோரிக்கையையும்,  எண்ணத்தையும் நம்முடைய திட்டங்கள் மூலமாக செயல்படுத்திக் கொடுத்திருக்கிறோம்!” என்றார்.