“தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்க வேண்டும்”- தூது அனுப்பிய மு.க.ஸ்டாலின்

 
s

தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்க வேண்டும், நபார்டு நிதி ரூ.4,500 கோடி மற்றும் குளச்சல் துறைமுக விரிவாக்க பணிகளுக்காக ரூ.350 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2025-26 ஆம் ஆண்டு நிதியாண்டில், NABARD வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு  மேம்பாட்டு நிதியின்  (Rural Infrastructure Development Fund - RIDF) கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (FIDF)  கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ. 350 கோடி நிதியையும் விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த தமிழ்நாடு அரசு சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதியுடன் இணைந்து, இன்று டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, வழங்கியதுடன் விரைவில் உரிய நிதியினை வழங்கிட ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். 


இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில், அதனை மேற்கோள் காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னைச் சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.