“தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அவரை பற்றி பேச எடப்பாடிக்கு எந்த அருகதையும் இல்லை”- இபிஎஸ்

 
MKstalin

தலைவர் கலைஞர் பற்றி பேச எடப்பாடிக்கு எந்த அருகதையும், யோக்கிதையும் இல்லை. தலைவர் கலைஞர் சிங்கம் போன்றவர் அவர் பெயரை உச்சரிக்க கூட உங்களுக்கு தகுதி கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Image

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது! தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக அவரை எந்நாளும் போற்றி வணங்குபவன்! பண்பற்ற பழனிசாமி அவர்களே, தலைவர் கலைஞரும் நானும் மக்களைச் சந்தித்து முதலமைச்சரானவர்கள். உங்களைப் போல, கூவத்தூர் கும்மாளங்களால், கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் பொறுப்பை ஏலத்துக்கு எடுத்தவர்கள் அல்ல!


எங்களைப் பற்றிப் பேசும் தகுதி உங்களுக்கு இல்லை! தமிழ்நாட்டுக்கு மக்கள் என்றுமே அந்தத் தகுதியை உங்களுக்கு வழங்க மாட்டார்கள்! மே 4: மக்களின் Judgement Day-வில் உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.