“Very sorry, உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது!திரும்பவும் திராவிட மாடல் அரசுதான்”- மு.க.ஸ்டாலின்
மத உணர்வுகளைத் தூண்டிக் குளிர்காய யார் - எவ்வளவு முயன்றாலும், திரும்பவும் திராவிட மாடல் அரசுதான்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த்துள்ளார்.

திண்டுக்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தீரத்துக்கும் உறுதிக்கும் பெயர்பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் 1,595 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்று, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டேன். நான்கரை ஆண்டுகளில் 4,000 கோயில் குடமுழுக்குகளை நடத்தி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள நம் #DravidianModel அரசை அவதூறுகளால் வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால்... Very sorry, உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது! தமிழ்நாட்டின் reality-யும் புரியாமல், வகிக்கும் பொறுப்பின் dignity-யும் உணராமல் பொய்க் குற்றச்சாட்டுகளை வாசிப்பவர்களுக்கு, "பக்தர்கள் போற்றும் ஆட்சி இது" என மக்கள் தீர்ப்பில் தெரியவரும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


