“அன்பில் மகேஷின் கைது நடவடிக்கையைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம்"- மு. க. ஸ்டாலின்
பசும்பொனில் உள்ள முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செய்துவிட்டு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு. க. ஸ்டாலின், "டிவிகே (TVK)-க்கு வாக்களித்தவர்கள் கூட, இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் சூட் அணிந்துகொண்டு, ஏதோ அலுவலகத்திற்குப் பணிக்குச் செல்வது போல நடந்துகொள்கிறார். தவெக ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் கைது நடவடிக்கையைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம். நெருக்கடிகளை எதிர்கொண்ட இயக்கம் திமுக. தடா, பொடா சட்டங்களைப் பார்த்தவர்கள் நாங்கள். எதையும் சந்திக்கத் தயார்! ஆட்சிக்கு வந்து ஆறு மாசம் ஆகப்போற நிலையிலும் எல்லாத்துக்கும் திமுக திமுக என்று சொல்வது தான் இவங்ககிட்ட இருக்கிற ஒரே பதில். ஓட ஓட விரட்டி கொலை, சிறைக்கைதிகள் ஓட்டம், சிறுமிகள் மாயம்,கொலை செய்துவிட்டு சாதாரணமாக செல்லும் காட்சிகளை எல்லாம் முதல்வர் பார்க்கிறாரா? இல்லையா? இந்த செய்திகள் அவர் காதுக்கு போகுதா? இது எதுவுமே நடக்காத மாதிரி தான் அவருடைய செயல்பாடு இருக்கு.ஒரு ரெஸ்பான்ஸ் கூட இல்லை. பெண்களை தவெக காப்பாற்ற வேண்டாம். தவெககிட்ட இருந்து தான் பெண்களை காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கு. சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட முதல்வர் விஜய் எங்கேயும் போக வேண்டாம். தன்னோட கட்சியில் இருப்பவர்களை கட்டுப்படுத்தினாலே குற்றங்கள் பெருமளவில் குறையும்.
சிறைக்கைதிகள் தப்பித்து ஓடும் நிலையில்தான் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை ஒருபக்கம் என்றால், குழந்தைகள், சிறுமிகள் காணாமல் போகிறார்கள். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை.ஆனால், சினிமா ஹீரோவாக இருந்தவர் நிஜத்தில் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஆபீஸ் டூட்டிக்குச் செல்வது போல், கோட் சூட் போட்டுக்கொண்டு 9 மணிக்கு வந்துவிட்டு, 5 மணிக்கெல்லாம் கிளம்பிவிடுகிறார். சினிமாவில் ஹீரோவாக இருந்தவர் நிஜத்திலும் அப்படியே இருப்பார் என நினைத்து சில லட்சம் பேர் செய்த தவறால் தமிழ்நாட்டுக்கு இந்த நிலைமை.. தவெக ஆட்சி வரவேண்டும் என்று விரும்பிய மக்களே, இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மக்களே சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.” என்றார்.

