"என்ன பண்ணுறது.. தைரியமா இரு"- தோல்வியடைந்த திமுக வேட்பாளருக்கு ஆறுதல் சொன்ன மு.க. ஸ்டாலின்

 
s

தாராபுரத்தில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளருக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.


தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யாவை 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற சத்தியபாமாவுக்கு மொத்தம் 6,841 வாக்குகள் கிடைத்துள்ளன. தாராபுரத்தில் அதிமுகவின் பானுமதி 45,280, நாம் தமிழர் கட்சி கார்த்திகா 5,268, இந்திய கம்யூனிஸ் லட்சுமணன் 1,157 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தாராபுரத்தில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளருக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். சுகன்யாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட மு.க.ஸ்டாலின், “என்ன பண்ணுறது.. தைரியமா இரு... 57 ஆயிரம் வாக்கு வாங்கிவிட்டோம். ஒன்னும் தவறு இல்லை. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த வெற்றியில் உங்க பேச்சு, உழைப்பு, தைரியம் எல்லாமே இருக்கு..” எனக் கூறினார்.