கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி!
வரலாற்றில் முதல் முறை ஆளுங்கட்சி முதல்வர் ஸ்டாலின் தோல்வியை தழுவினார்.
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட தவெகவின் வி.எஸ்.பாபு 76,413 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மு.க.ஸ்டாலின் 67,530, அதிமுக சார்பில் போட்டியிட்ட சாந்தானகிருஷ்ணன் 17,110 வாக்குகளும் பெற்றுள்ளனர். 4704 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. சுமார் 8,883 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றுள்ளது. 19 சுற்றுகளின் முடிவடைந்த நிலையில், தவெகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
முதலமைச்சராக, திமுக தலைவராக எவ்வளவு பணிகள் இருந்தாலும், எந்த ஊரில் ஆய்வுக் கூட்டம் நடத்தினாலும், தன்னுடைய கொளத்தூர் தொகுதிக்கு வாரம் ஒரு முறையாவது சென்றுவிடுவார் மு.க.ஸ்டாலின். அங்கு அவர் கொண்டுவராத திட்டங்கள் இல்லை, யார் உதவி, புகார் என்று கேட்டாலும் கொளத்தூர் தொகுதியில் அதற்கான தீர்வு உடனே கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார். எந்த குறையும் வந்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்படியிருந்தும், அந்த தொகுதிக்கு எவ்வளவோ செய்தும், கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்திக்கிறார்.தவெகவுக்கு கிடைத்த வாக்குகள் விஜய் என்ற ஒற்றை மனிதருக்காக கிடைத்த வாக்குகளாகவே பார்க்கப்படுகிறது.

