"பெட்டி பாமா, பல்டி பாமா.." அவர் எப்படி பல்டி அடித்தார் என தெரியவில்லை- மு.க.ஸ்டாலின்

 
MKstalin

மிழ்நாடு முழுவதும் மின்வெட்டு, பால் கிடைப்பதில்லை, ரேஷனில் பாமாயில் கிடைக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தாராபுரம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தவெக அமைச்சர்களுக்கு எந்தத் துறை யாருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று அவர்களுக்கே தெரியவில்லை . தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு, பால் கிடைப்பதில்லை, ரேஷனில் பாமாயில் கிடைக்கவில்லை. மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமைச்சர்கள் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் டேரா போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் செயல்படாமல் இருக்கிறது. அதனால்தான் மக்களே ஆளுங்கட்சி வேட்பாளர்களையும், தவெக கட்சியினரையும் விரட்டியடித்து வருகிறார்கள். 118 இடங்கள் கூட வெல்ல முடியாத முதல்வர் தான் இன்று இருக்கிறார்

ஆணவத்தின் உச்சத்தில் இருக்கும் விஜய், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை கொச்சைப்படுத்தியுள்ளார். அவருக்கு தாராபுரம் மக்கள் கொடுக்கும் அடி மரண அடியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கும். குதிரை பேரம் மூலம் ஜனநாயகத்தைச் சீர்குலைத்திருக்கிறார். திமுக கூட்டணிக் கட்சிகளாக இருந்த காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல். கட்சிகளுக்கு சோபா கொடுத்து ஆதரவு வாங்கினார்கள். அதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, இப்படி இடைத்தேர்தல் வரும் அளவுக்குக் கொண்டுவந்துள்ளனர். சத்தியத்திற்கு விரோதமாக விலைபோன வேட்பாளர் சத்தியபாமாவை மக்கள் ‘பெட்டிபாமா’, ‘பல்டிபாமா’ என அழைக்கிறார்கள். ஜனநாயகத்தைச் சாகடித்ததால் இந்த இடைத்தேர்தல் நடந்துள்ளது. வாக்களித்த மக்கள் மீது துளிக்கூட மதிப்பில்லாமல் வேறு கட்சிக்கு ஓடிப்போனார் சத்தியபாமா. இதில் யாருக்கு நலன் இருக்கிறது? வாக்குகளை விற்றவருக்கும், வாங்கியவருக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என்றார்.

-