“ஜோதிடர் சொல் பேச்சை கேட்டு பட்டு, வேட்டி அணியும் விஜய்"- மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் விஜய் பண்ணையார் போன்று பட்டு வேட்டி அணிந்து பந்தா செய்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், “கடந்த காலத்தைவிட பாலியல் வன்கொடுமைகளை இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஜோதிடர் சொல் பேச்சை கேட்டு வெள்ளிக்கிழமையன்று பட்டு, வேட்டி அணியும் முதலமைச்சர் விஜய். சட்டம், ஒழுங்கு பற்றி கேட்டால் மற்ற அமைச்சர்கள் பதிலளிக்கிறார். குறுவை சிறப்பு தொகுப்புக்கும், வறட்சி நிவாரணத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் முதலமைச்சர் விஜய். அறிவிப்புகளை மாற்றும் யூடர்ன் அரசாக தவெக அரசு செயல்படுகிறது. பெரும்பாலான இடங்களில் மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. கடந்த காலத்தைவிட பாலியல் வன்கொடுமைகளை இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் விலைவாசியும் உயர்ந்துவிட்டது. மளிகை பொருட்களின் விலை கண்ணாபிண்ணா என ஏறிவிட்டது. அறிவிப்புகளை மாற்றும் யூடர்ன் அரசாக தவெக அரசு உள்ளது. போதைப்பொருட்கள் வைத்திருப்போர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை.
திமுக வேட்பாளர் சுகன்யா துடிப்பானவர், படித்தவர், வழக்கறிஞர். உங்களுக்காக சட்டமன்றத்தில் வாதாடி உரிமையைப் பெற்றுக்கொடுப்பார். உங்களிடம் வாங்கும் ஓட்டை வேறு கட்சிக்கு விலைபேசி விற்கமாட்டார். நியாயம் வெற்றி பெற திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தால் நடந்த தேர்தலில், மக்கள் அளித்த ஓட்டை செல்லாத ஓட்டாக மாற்றியிருக்கிறார்கள். அந்த மக்கள் விரோதிக்கு, துரோகிக்கு நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். துரோகத்தை முறியடிப்பது மட்டுமல்லாது, விலைபோகாத ஒருவரை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். அதனால், திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.

