“இறங்கி ஆட நான் தயார்... திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய நீங்க ரெடியா?”- மு.க.ஸ்டாலின்

 
ச்

டெல்லி ஆதிக்கத்துக்கு எதிராக தீர்ப்பு எழுத உங்கள் ஆதரவு வேண்டும். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய நீங்க ரெடியா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசு சொன்னபடி தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை பின்பற்றின. ஆனால், அதுவே ஆபத்தாக மாறும் வகையில் தொகுதி மறுசீரமைப்பை இன்று ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக ஒன்றிய அரசு நம்மை தண்டிக்கப் பார்க்கிறது. தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பவர்கள் படிப்பறிவற்றவர்கள் என பியூஷ் கோயல் கூறுகிறார். நாவை அடக்கிப் பேச வேண்டும். அத்துமீறி வாய்க்கொழுப்போடு திமிர்த்தனமாக பேசிவருகிறார். மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தமிழகத்திற்கு தண்டனையா? தமிழ்நாடு என்பது 8 கோடி மக்களின் உரிமைக்குரல். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அத்துமீறி பேசி வருகிறார். தமிழ்நாட்டை ஒருபோதும் குறைத்து எடை போடாதீர்கள். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக இந்த ஸ்டாலின் களத்தில் நிற்பான். சண்டை செய்து கொண்டே இருப்பான். இறுதி எச்சரிக்கை கொடுத்தாச்சு... 

டெல்லி ஆதிக்கத்துக்கு எதிராக தீர்ப்பு எழுத உங்கள் ஆதரவு வேண்டும். திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய நீங்க ரெடியா? இது நமக்கான காலம் - இறங்கி ஆட நான் தயாராக இருக்கிறேன். கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை தமிழ்நாட்டின் உரிமையை விட்டுத் தர மாட்டேன். பிரதமர் மோடி அவர்களே... நெருப்போடு விளையாடாதீர்கள். திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் அரசு ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். அரசு ஊழியர்கள் எப்போதும் போல திமுகவுக்கு உறுதுணையாக இருங்கள். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்” என்றார்.