“வரும் தேர்தலில் பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும்”- மு.க.ஸ்டாலின்

 
MKstalin

வரும் தேர்தலில்  பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

சீர்காழியில்  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  6 வேட்பாளர்களுக்கு  வாக்கு கோரி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருவாரூரில்  பிரச்சாரத்தை  துவங்கி இன்று சீர்காழிக்கு வந்துருக்கேன்  நான் உங்கள் ஊர் மாப்பிள்ளை  உங்கள் ஊர் மருமகனா வாக்கு கேட்டு வந்துருக்கேன்  நாகை எப்போதும் வாகை சூடும் ஊர், மயிலாடு மாவட்டத்திலும் திமுக 100% வெற்றி உறுதி. பூம்புகார்,  மயிலாடுதுறை,  சீர்காழி, வேதாரண்யம், நாகப்பட்டினம், கீழ்வேளூர்  ஆகிய 6 வேட்பாளர்களையும் மாபெரும் வெற்றியடையச் செய்திட வேண்டும். மயிலாடுதுறை - நாகப்பட்டினம் மாவட்டங்கள் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த மாவட்டம். மீனவர், விவசாயிகள் உள்ளிட்ட  அனைவருக்கும் திட்டங்களை செய்து கொடுத்து பேசுகிறேன்.

தேர்தல் கருத்துக்கணிப்பில் திமுக மீண்டும் வெற்றி பெரும் என்று வருவதால்  எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து பேசுகிறார். 2026 தேர்தலில் பழனிசாமி எனும் அசிங்கத்தை அகற்ற வேண்டும். அ.தி.மு.க வையும் பழனிசாமியையும் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.கவினர் தேர்தலுக்காக தமிழகத்திற்கு படையெடுக்கின்றனர். வரும் தேர்தலில் அ.தி.மு.க வும் - பா.ஜ.க வும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறக்கூடாது. ஒன்றிய அரசு தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கிறது,மகாராஸ்ட்ரா மாநில முதல்வர் மதுரையில் பேசிய போது மதுரையில்  பா.ஜ.க வென்றால் மெட்ரோ வரும் என்று பட்னாஸ் பேசியதற்கு கண்டனம். 6 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்துவிட்டது, ஊழல் நிறைந்த பா.ஜ.க அரசு தமிழகம் வளரக்கூடாது என்று நினைக்கிறது. தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார். வாக்கு எண்ணக்கூடிய நாள் கல்யாண நாள்,தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாள் நிச்சயதார்த்த நாள். 8 ஆயிரம் கூப்பனைக் கொண்டு உங்களுக்கு பிடிச்ச பொருட்களை வாங்கிக்கொள்ளுங்கள். தாய்மார்கள் என்ன வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க...   கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1000 என்பது 2000 மாக உயர்த்தப்படும்” என்றார்.