“கண்டெண்ட் இல்லாமல் தினமும் கண்டதை பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி” - ஸ்டாலின்

 
ச்

எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கும் தகுதி இல்லாதவர் போல் நடந்து கொள்கிறார் இபிஎஸ் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

சீர்காழியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை ஏலம் எடுத்து பதவிக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. பேசுவதற்கு கண்டெண்ட் இல்லாமல் கண்டதையும் பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கும் தகுதி இல்லாதவர் போல் நடந்து கொள்கிறார் இபிஎஸ். தோல்வி பயத்தில் பழனிசாமியின் தரம் கீழே சென்று கொண்டிருக்கிறது. அவதூறு பேச்சுக்களால் தன்னையும் தனது கட்சியையும் மக்களிடம் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். பாஜக அரசின் தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்திக்கவுள்ளது. தொகுதி மறுவரையறையால் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை உயரும். தொகுதி மறுவரையறை, மும்மொழி கொள்கை குறித்து எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை. பாஜக அதிமுகவையும் பழனிசாமியையும் குத்தகைக்கு எடுத்துள்ளது. அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் தமிழ்நாட்டை எடப்பாடி பழனிசாமி கூறுபோட்டு விற்பனை செய்திருப்பார்” என்றார்.