"பழனிசாமி ஃபியூஸ்போன சாமியாகிவிட்டார்" - ஸ்டாலின்

 
s

திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சுழியில் போட்டியிடும் அமைச்சர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டையில் களமிறங்கும் அமைச்சர் ராமச்சந்திரன், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “`மக்கள் ஆணையிட்டால்' படத்தில் விஜயகாந்த் நடித்த படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன். விஜயகாந்திற்கு வாக்கு கேட்டு திரைப்படத்தில் நடித்தேன். தற்போது விஜயகாந்த் மகனுக்கு முதல்வராக வாக்கு கேட்கிறேன். சிவகாசி பட்டாசு என்றாலும் விருதுநகர்தான், சாத்தூர் பலகாரமாக இருந்தாலும் விருதுநகர்தான், திருவில்லிபுத்தூர் பால்கோவா என்றாலும் விருதுநகர் தீப்பெட்டியாக இருந்தாலும் விருதுநகர்தான், பரோட்டாவாக இருந்தாலும் விருதுநகர்தான், காலண்டராக இருந்தாலும் விருதுநகர்தான். துரோகத்தின் உருவம் பழனிசாமிதான். ஜெயலலிதா எதிர்த்த பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் முழு வெற்றியை மக்கள் திமுகவுக்கு கொடுத்தார்கள். ஏற்கனவே 10 தோல்வியை சந்தித்த பழனிசாமி, 11வது தோல்வியை சந்திப்பார். தேர்தல் அறிக்கை என்னும் சூப்பர் ஸ்டாரை களத்தில் இறக்கி பரப்புரை செய்து வருகிறேன். பழனிசாமி ஃபியூஸ்போன சாமியாகிவிட்டார். இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் என்பது அல்டிமேட் திட்டம். இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். விருதுநகரில் பசுமை பட்டாசு உற்பத்தி ஊக்குவிக்கப்படும். அடுத்த 5 வருடங்களில் 10 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும்.

அனைத்து தரப்பு அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்.  பனைத் தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி ஏற்படுத்தப்படும்.  தொழிற்சாலைகளின் பெண்கள் பணிக்கு செல்லும் வகையில் 1000 குழந்தைகள் காப்பகம் உருவாக்க உள்ளோம். மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் ஆட்டோ வாங்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படும்” என்றார்.