"பொதுவாழ்வின் எடுத்துக்காட்டு துரைமுருகன்"- மு. க. ஸ்டாலின்

 
zs

1965-ஆம் ஆண்டு இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தளபதியாக உருவெடுத்தவர் துரைமுருகன். பொதுவாழ்வில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அண்ணன் துரைமுருகன். 


திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "சட்டமன்றத்தில் அண்ணன் துரைமுருகனை எதிர்த்து பேசுவது என்பது அப்போது பெரிய விசயமாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது, அந்த ஆட்சிக்கு திமுக சார்பில் கா.சுப்பு, ரகுமான் கான், அண்ணன் துரைமுருகன் ஆகிய 3 பேர் சட்டமன்றத்தில் சிம்மசொப்பனமாக விளங்கினர். இதனால் இவர்கள் சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்று எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுத்தார். எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கியபோது தனது கட்சிக்கு அழைத்தார். ஆனால் துரைமுருகன் அவர்களோ, நீங்கள் எனது கல்விக்கு உதவி இருக்கலாம், என் மீது அன்பையும், பாராட்டையும் பொழிந்திருக்கலாம்.  ஆனால் கொள்கை என்று வரும்போது, எனக்கு தலைவர் கருணாநிதி தான். நான் அவருடன் தான் இருப்பேன் என்று கூறி இன்று வரை திமுகவில் இருக்கிறார். 1965-ஆம் ஆண்டு இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தளபதியாக உருவெடுத்தவர் துரைமுருகன். பொதுவாழ்வில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அண்ணன் துரைமுருகன்!" என பெருமிதம் தெரிவித்தார்.