திமுக அமைச்சரின் மகன், மருமகன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்

 
minister senji masthan tn assembly

அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன், மருமகன் திமுக கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Masthan

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அமைச்சர் செஞ்சு மஸ்தான் மகன் நீக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் செஞ்சி  மஸ்தானின்  மகன் மொக்தியார் அலி திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பொறுப்பில் இருந்து வந்துள்ளார். இதே போல திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராக செஞ்சி மஸ்தான் மருமகன் ரிஸ்வான் பதவி வகித்துள்ளார்.

Masthan

 இவர்கள் நிர்வாக செயல்பாடுகளில் தலையிடுவதாக கூறி திமுக தலைமை மற்றும் திண்டிவனம் நகராட்சியின் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக கூறியிருந்தனர்.  அரசின் நலத்திட்ட உதவிகளிலும் இவர்களின் குடும்பம் தலையிடுவதாக கூறப்பட்டது . இந்த சூழலில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு பதிலாக ரோமியன் ம், ஷேக் வாகித் ஆகியோருக்கு  பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.