ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட G20 மண்டபத்தில் வெள்ளம்- உதயநிதி ஸ்டாலின்

பாஜகவை, மக்களின் கோபமும் - I.N.D.I.A- வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப்போவது உறுதி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Resp @LtGovDelhi saab,
— Saurabh Bharadwaj (@Saurabh_MLAgk) September 10, 2023
This is very serious. Even after ur 50+ inspections, if the very main area around Mandapam is submerged in water, then heads must roll. I as Minister of Delhi don’t have control over this Central Govt area, else would have assisted u sir. pic.twitter.com/hn0dSBSA78
உலக தலைவர்கள் திரண்ட ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் புகுந்த மழை வெள்ளம் குறித்து விமர்சித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், டோல்கேட் ஊழல் என ஊழலின் மொத்த வடிமாக மாறிப்போயுள்ளனர்.ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது. ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட G20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது.
ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், டோல்கேட் ஊழல் என ஊழலின் மொத்த வடிமாக மாறிப்போயுள்ளனர்.
— Udhay (@Udhaystalin) September 10, 2023
ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக்…
இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க மொழி - மதம் - கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் - I.N.D.I.A- வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப்போவது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.