இந்தியா கூட்டணியின் கூட்டம் பாஜகவினரை அச்சப்பட வைத்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி ஸ்டாலின்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது பாஜகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image


சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஒரே நாடு, மதம், கல்வி, மொழி என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது, இதனை திமுக தொடர்ந்து எதிர்க்கும். மத்திய பாஜக அரசை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, கொள்கை வித்தியாசங்கள் இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது பாஜகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. I.N.D.I.A கூட்டணியின் கூட்டம், பாஜகவினரை அச்சப்பட வைத்துள்ளது. பயத்தின் வெளிப்பாடே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியை பார்த்து பொறாமை படுகின்றனர். மாபெரும் மாற்றத்தை உருவாக்க இருக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கொச்சைப்படுத்தி  எழுதிய செய்தித் தாளை நேரடியாக கண்டிக்கும் புரிதலும், துணிவும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் நாள்தான் முழு வெற்றி என்றும், ஒவ்வொருவரும் உதயநிதியாக மாறி இறங்கி போராட வேண்டும். தமிழக குழந்தைகளை பார்த்துக்கொள்ள திராவிட மாடல் அரசும், முதல்வரும் இருப்பதால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..நீட் ஒழிப்புப் போராளி அனிதா நம்மை விட்டுப் பிரிந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. 1,000ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் இருக்கும். நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. நீட்டை ஒழித்துக் கட்டுவோம்” என்றார்.