அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்- ஆண், பெண் பாகுபாட்டையும் போக்கியுள்ளது: உதயநிதி ஸ்டாலின்

 
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்- ஆண், பெண் பாகுபாட்டையும் போக்கியுள்ளது: உதயநிதி ஸ்டாலின்

அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்களுக்கும் தலா ரூ.25,000 நிதி மற்றும் ஸ்மார்ட்போனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

Image

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை நிரந்தரமாக நீக்கிய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்கள். அதன்படி, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகிய மூன்று சகோதரிகள் அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அந்த சகோதரிகளை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம். அவர்களுடைய பணிக்கு பயனளிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் மற்றும் தலா ரூ.25 ஆயிரம் நிதியினை வழங்கினோம்.

Image

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், சாதி ஏற்றத்தாழ்வை மட்டுமன்றி, ஆண் - பெண் பாகுபாட்டையும் போக்கியுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அர்ச்சகர் பயிற்சி முடித்த  சகோதரிகளின் பணி சிறக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.