மறைந்த பங்காரு அடிகளாரின் பேரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த உதயநிதி

 
உதயநிதி ஸ்டாலின்

மறைந்த பங்காரு அடிகளாரின் பேரனும், அன்பழகனின் மகனுமான அகத்தியன் - ஷாலினி திருமணம் நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்றது. 

Image

அகத்தியன் - ஷாலினிக்கு கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர், அமைச்சருமான துரைமுருகன், அதிமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்கட்சி தலைவர் எடபாடி பழனிசாமி, அமைச்சர்கள், கே.என்.நேரு, பொண்முடி, காந்தி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  செஞ்சி மஸ்தான், முன்னாள் மத்திய அமைச்சர்கள்கள் பா.ஜ.க பொண்.ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பா.ம.க ஏ.கே.மூர்த்தி,  முன்னாள் முதல்வர்கள், புதுச்சேரி நாராயணசாமி, ஓ.பன்னீர்செல்வம், நடிகர்கள் ஆனந்தராஜ், சந்தானம், டிரம்ஸ் மணி, செந்தில், நடிகை ரோஜா, சீதா,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், செல்வகணபதி, புதுவை எம்.பி வைதியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன், ராஜா, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதிசீனுவாசன், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, பண்ருட்டி ராமசந்திரன், கே.சி.சண்முகம்,  உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு வாழ்த்தினர். இந்நிலையில் இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அகத்தியன் - மருத்துவர் ஷாலினி இணையரை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

Image

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் மறைந்த திரு.பங்காரு அடிகளாரின் பேரனும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவர் திரு.கோ.ப.அன்பழகன் அவர்களின் அன்பு மகனுமான தம்பி அகத்தியன் - மருத்துவர் ஷாலினி இணையரின் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், மேல்மருவத்தூரில் உள்ள அவர்களது இல்லத்துக்கு இன்று சென்று, இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் புதுமணத் தம்பதியர் இருவரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.