முதல்வரை ராஜினாமா செய்ய கூறும் அருகதை பழனிசாமிக்கு இல்லை- பொன்முடி

 
ponmudi

கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அமைச்சர் பொன்முடி கேட்டறிந்தார்.

Image

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, “விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் விவகாரத்தினை அரசியலாக்க வேண்டிய நிகழ்ச்சி அல்ல. முதல்வர் பதவி விலக வேண்டும் என சிலர் உலறி கொண்டிருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என கூறும் எடப்பாடி பழனிசாமி, 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அம்பத்தூரில் கள்ளச்சார உயிரிழப்பு ஏற்பட்டதை மறந்துவிட்டாரா? திண்டுக்கல், காஞ்சிபுரம் 2018, 2020 போன்ற ஆண்டுகளில் கள்ளச்சாராயத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி அரசியல் பேச வேண்டுமென்று பேசிக்கொண்டிருக்கிறார்.

Image

அதிமுக ஆட்சியில் தான் குட்கா,கள்ளச்சாராயம் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு வருட ஆட்சியில் கள்ளச்சாரயத்தினை ஒழிக்க தீவிர நடவடிக்கையில் முதலமைசர் ஈடுபட்டதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 55,474 கள்ளச்சாராய வழக்குகள் போடப்பட்டு 55,173 பேர் கைது செய்யப்பட்டு 69 நான்கு சக்கர வாகனம் 1.077 இரு சக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 79 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. முதல்வரை ராஜினாமா செய்ய கூறும் அருகதை எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. காவல் துறையை மிக திறமையாக முதலமைச்சர் செயல்படுத்தி கொண்டிருக்கிறார்” என்றார்.