“கர்நாடகா எப்போதும் முரண்டுதான் பிடிக்கும்”- துரைமுருகன்

 
duraimurugan

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கான நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் மூலம் மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

காவிரியில் தண்ணீர் திறக்க கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சரை, தமிழக அமைச்சர் துரைமுருகனின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் தமிழக  எம்பிக்களும் சந்தித்து அழுத்தம் கொடுத்தனர். அதன்பின் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு படி காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட வேண்டும். அது சரியாக செயல்படவில்லை எனில், மத்திய அரசு தலையிடலாம். மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். இன்றைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் 5000 கன அடி நீர் தர உத்தரவிடுகிறது. அதையாவது அவர்கள் பெற்றுக்கொடுத்தால் மகிழ்ச்சி. கர்நாடகா என்றைக்குமே உச்சநீதிமன்ற உத்தரவுகளை எல்லாம் பின்பற்றியது இல்லை.

காவிரி விவகாரத்தில் கர்நாடகா இன்று நேற்றல்ல... எப்போதும் முரண்டுதான் பிடிக்கும். தண்ணீர் தர எப்போதும் ஒப்புக்கொண்டதில்லை. மத்திய கர்நாடக அரசுகளாஇ நாங்கள் நம்பவில்லை. உச்சநீதிமன்றத்தை நம்புகிறோம். காவிரி விவகாரத்தில் ஒவ்வொரு முடிவையும் உச்சநீதிமன்றம் மூலமாக தான் தமிழகம் பெற்றிருக்கிறது” என்று தெரிவித்தார்.