கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பு- திமுக அமைச்சரின் சகோதரர் கட்சியில் இருந்து நீக்கம்
Updated: May 26, 2023, 18:48 IST1685107100959

கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சகோதரர் காஜா நஜீர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் வடக்கு மாவட்ட செஞ்சி கிழக்கு ஒன்றியம் செஞ்சி பேரூர் கழக செயலாளர் காஜா நஜீர் அவர்களை பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து கழகப் பணிகள் செவ்வனே நடைபெற அவருக்கு பதிலாக எம்.கார்த்திக் செஞ்சி பேரூர் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காஜா நஜீர் கடந்த 15 ஆண்டுகளாக செஞ்சி பேரூர் கழக செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் காஜா நஜீர் அமைச்சர் மஸ்தானின் தம்பியாவார்.